யோஹானியை தமிழில் பாட வைப்பதா? ஹாரிஸ் ஜெயராஜ் - மதன் கார்க்கி மீது முறைப்பாடு

Tamil Nadu Harris Jayaraj Yohani Madhan Karky
By Murali Oct 16, 2021 01:44 AM GMT
Report
Courtesy: Tamil - Indian Express

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை புகழ்ந்து பாடிய சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவை தமிழ் சினிமாவில் பாட வைப்பதா என்று கேள்வி எழுப்பி இலங்கை தமிழர்களும் தமிழ்த்தேசிய ஆதரவாலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

உலக அளவில் பிரபலமான ‘மணிகே மகே ஹிதே’ என்ற சிங்கள மொழி பாடலின் மூலம் பிரபலமானவர் பாடகி யோஹானி டி சில்வா, இவர் தமிழ் சினிமாவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், மதன் கார்க்கி வரியில் பாடிய பாடலுக்கு இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. யோஹானி டி சில்வா தமிழ் சினிமாவில் பாடுவதற்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?

யார் இந்த யோஹாணி டி சில்வா?

  பிரபலமான ‘மணிகே மகே ஹிதே’ என்ற சிங்கள மொழிப் பாடலைப் பாடியதன் மூலம் உலக அளவில் அறியப்பட்டவர் பாடகி யோஹாணி டி சில்வா. ஆனால், இவர் அதற்கு முன்னதாகவே இலங்கையில் சிங்களர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கும் நன்கு தெரிந்தவர்.

பாப் இசை பாடகியான யோஹானி, இலங்கை அரசின் சிங்கள இராணுவ தளபதிகளில் ஒருவரான பிரசன்ன டி சில்வாவின் மகள் ஆவார். 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் தமிழர்களை படுகொலை செய்தது.

இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தில் 55, 59 படைப்பிரிவுகளுக்கு தளபதியாக இருந்த பிரசன்ன டி சில்வாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று இலங்கை தமிழர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சிங்கள இனவெறி மிக்க அதிகாரிகளில் சில்வாவும் ஒருவர் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவ தளபதிகளில் ஒருவான பிரசன்ன டி சில்வாவின் மகளான பாடகி யோஹானா, “என் அப்பாதான் விடுதலைப்புலிகளையும், தமிழர்களையும் கொன்ற, சிங்கள சிங்கம்” என்று பெருமையுடன் கூறியதாக இலங்கை தமிழர்களும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சூழலில்தான், பாடகி யோஹானி, சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தி லெஜெண்ட் சரவணன் நடித்துள்ள படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மதன் கார்க்கி வரிகளில் பாடியுள்ளார். இந்த படத்தில் ஒரு பாடலை யோஹானியை அழைத்து வந்து பாட வைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் கீர்த்தி திவாரி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் பிரபு, நாசர் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்கின்றனர்.

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் நடந்த தமிழர்கள் படுகொலையில் முக்கிய பங்கு வகித்த இராணுவ தளபதி பிரசன்ன டி சில்வா மகள் யோஹானி டி சில்வா தமிழ் சினிமாவில் பாட வைக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பக இயக்குனர் மு. களஞ்சியம் தனது டுவிட்டர் பக்கத்தில்குறிப்பிடுகையில்,

 

“என் அப்பாதான் விடுதலைப்புலிகளையும், தமிழர்களையும் கொன்ற, “சிங்கள சிங்கம்” என்று பெருமைப்படும் இனப்படுகொலையாளி இராணுவ தளபதி பிரசன்ன டீ சில்வாவின் மகள் பாடிய பாட்டை ஹாரிஸ் ஜெயராஜும் , மதன் கார்க்கியும் நீக்க வேண்டும்.

இன எதிரியின் குரல் நமக்கெதற்கு?” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் “என் அப்பாதான் விடுதலைப்புலிகளையும் எங்களை எதிர்த்த தமிழர்களையும் கொன்று எங்கள் நாட்டை விடுதலை செய்தவர்” என்று பெருமைப்படும் இனப்படுகொலையாளி இராணுவ தளபதி பிரசன்ன டீ சில்வாவின் மகளை பாட்டு பாட வைத்திருக்கிறார்கள் ஹாரிஸ் ஜெயராஜும் , மதன் கார்க்கியும் தமிழர்களா நீங்கள்?” என்று இயக்குனர் மு களஞ்சியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிகை விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, அந்த படம் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் நடந்த தமிழர்கள் இனப் படுகொலையில் முக்கிய பங்கு வகித்த சிங்கள ராணுவ தளபதி பிரசன்ன டி சில்வா மகள் யோஹானி டி சில்வா தமிழ் சினிமாவில் பாடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US