அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிரான விசாரணைகள் குறித்து ஐ.நாவில் முறைப்பாடு
அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அருட்தந்தை சிறில் காமினியிடம் விசாரணை நடாத்துவதன் மூலம் அவரை அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
அருட்தந்தைக்கு எதிரான விசாரணைகள் குறித்து கவனம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான அலுவலகத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்டவர்கள் இந்த முறைப்பாட்டை இன்று செய்துள்ளனர்.
குண்டுத்தாக்குதல் நடத்தப்படக்கூடிய நபர்கள் பற்றிய விபரங்கள் உண்டு என கூறிய ஞானசார தேரரிடம் விசாரணை எதுவுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
குண்டு தாக்குதல் பற்றி கூறிய ஞானசார தேரிடம் விசாரணை நடத்தப்படவில்லை, நிலந்த ஜயவர்தனவிடம் விசாரணையில்லை. ஜனாதிபதி விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை.
இவ்வாறான ஓர் பின்னணியில் அருட்தந்தை சிறில் காமினியை மட்டும் விசாரணைக்கு உட்படுத்துவதும் அழுத்தங்களை பிரயோகிப்பதும் கண்டிக்கப்பட வேண்டியது என காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.





15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
