நெல் அறுவடை குறைந்தால் இழப்பீடு - கமத்தொழில் அமைச்சர்
இம்முறை பெரும்போக அறுவடையின் போது நெல் அறுவடை குறைந்தால், அதற்காக அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் (Gotapaya Rajapaksa) இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் உரிய நேரத்திற்கு பசளை வழங்கப்படும். வழங்கப்படும் பசளை தொடர்பான பொறுப்பை அரசாங்கம் முற்றாக ஏற்றுக்கொள்ளும்.
சேதனப் பசளையை தயாரிக்க அரசாங்கம் வழங்கிய 12 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுக்கொண்ட உழவர்களை தவிர ஏனைய உழவர்களுக்கு கமத்தொழில் அபிவிருத்தி பிரதேச மத்திய நிலையத்தின் ஊடாக சேதனப் பசளை எந்த தட்டுப்பாடும் இன்றி இலவசமாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நெல் அறுவடை குறைந்தால், அரசாங்கம் இழப்பீடு வழங்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளதால், பல மாவட்டங்களில் உழவர்கள் மத்தியில் காணப்பட்ட சந்தேகம் தீர்ந்துள்ளது என மாவட்ட கமத்தொழில் அபிவிருத்தி தொடர்பான பிரதி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam