ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவேண்டும்: ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
24 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து கடிதம் ஒன்றின் மூலம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் அரசியல்
“ஜனாதிபதியாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு எங்கள் வாழ்த்துக்கள், இலங்கையின் அரசியல் அமைப்பினாலும் ஐசிசிபிஆரினாலும் பாதுகாக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைகளை உறுதி செய்யுமாறு உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வது மற்றும் பத்திரிகையாளர்களிற்கு எதிரான கடந்த கால குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வது ஆகியவை குறித்த தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதிகளை நாங்கள் வரவேற்கின்றோம் .
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்கவேண்டும், அல்லது இந்த சம்பவம் குறித்து பொறுப்புக்கூறலிற்காக உடனடி பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்” என்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri