ஆட்பதிவுத்திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் என்று ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆட்பதிவுத்திணைக்கள ஆணையாளர் வியானி குணதிலக்க (Viani Gunathilaka) இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் விண்ணப்பத்தாரிகள் தமது சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக நேரத்தையும், காலத்தையும் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல தலைமையக அலுவலகம் மற்றும் தென்மாகாண அலுவலகம் ஆகியவற்றில் அதிகமானவர்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.
இதன்படி கிராமசேவையாளர் ஊடாக விண்ணப்பிக்கும் ஒருவர், தமது விண்ணப்பத்தில் ஒருநாள் சேவையா அல்லது சாதாரண சேவையா என்பதை குறிப்பிட வேண்டும்.
இதன் பின்னர் பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு சென்று தமக்கான திகதியையும், நேரத்தையும் முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் தமக்கான திகதிகளில் சென்று தேசிய அடையாள அட்டைகளைப்
பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஆட்பதிவுத்திணைக்கள ஆணையாளர் அறிவித்துள்ளார்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
