புத்தாண்டையொட்டி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அதிகாரிகள்
2026ஆம் ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01.01.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகம்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஏற்கும் நிகழ்வு இன்று (1.1.2026) காலை 9.00மணிக்கு மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில், தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டு, ஒன்றுக்கூடல் நடைபெற்றுள்ளது.

இதில், மாவட்ட செயலாளர் மற்றும் துறை சார்ந்த திணைக்கள தலைவர்கள் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம்
அம்பாறை - கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து, 2026ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று(1) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடமைகள் பொறுப்பேற்பு
தேசியக் கொடியேற்றத்துடன் ஆரம்பி்க்கப்பட்ட சத்தியப்பிரமாண நிகழ்வில், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அதிதியாக பங்கேற்றுள்ளதுடன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய நிர்வாகப்பிரிவு உள்ளிட்ட பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட் உட்பட பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
தம்பலகாமம் பிரதேச செயலகம்
2026ம் ஆண்டின் முதலாவது நாளான இன்று (01.01.2026) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் அரச கடமைகளை வைபவ ரீதியாக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சர்வமதத் தலைவர்களின் மத அனுஷ்டானங்கள் முடிந்த பின்னர், சகல உத்தியோகத்தர்களும் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.
நாட்டுக்காக தியாகம் செய்து உயிர் நீத்த முப்படை வீரர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் B.U.B.L.உடகெதர மற்றும் சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
கல்முனை வலயக் கல்வி அலுவலகம்
மலர்ந்துள்ள 2026 ஆண்டு புதுவருடத்தின் முதல் நாள் பணி தொடக்க விழா சத்தியபிரமான நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தல் இன்று(1.1.2026) இடம்பெற்றுள்ளது.
கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம். எஸ். ஸஹதுல் நஜீம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
இதன்போது தேசிய கீதம் மற்றும் வலய கீதம் என்பன இசைக்கப்பட்டு, முதல் நாள் சத்தியபிரமாண நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம்
2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று(01-01-2026) இடம்பெற்றுள்ளது.
2 நிமிட அஞ்சலி
இதன்போது, புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 9 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ச.மஞ்சுளாதேவி, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.ஜெயக்காந், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
வவுனியா
வவுனியா மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம் நிகழ்வு இன்று(01.01.2025) இடம்பெற்றுள்ளது.
அரசாங்க அதிபர் தேசிய கொடியை ஏற்றியிருந்ததுடன், இரண்டு நிமிட மெளன பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர், சத்திய பிரமாண நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, சர்வமத தலைவர்களின் ஆசி உரைகளும் இடம்பெற்றுள்ளன.
அம்பாறை மாவட்ட செயலகம்
அம்பாறை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று(1.1.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, மாவட்ட செயலகத்தின் அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்றுள்ளது.

தேசியக் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டசத்தியப்பிரமாண நிகழ்வில் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு புத்தாண்டிற்கான சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.
அத்துடன், அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்ரம கேட்போர் கூடத்தில் ஏனைய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
2026 ஆம் ஆண்டுக்கான புதுவருடப்பிறப்பு மற்றும் கடமை ஆரம்ப நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் நடந்து முடிந்துள்ளது.
திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் இன்று(1.1.2026) நடைப்பெற்றுள்ளது.
குறித்த ஆரம்ப நிகழ்வானது, மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடந்து முடிந்துள்ளது.
இந்த வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண இன்று(01.01.2026) புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
2026 ஆண்டின் முதல் நாள் அரச கரும பணிகள் இன்று(1.1.2025) சத்திய பிரமாணத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளர் பாலசிங்கம் சரண்ராஜ் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்தில் முன்னர் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய ஜெகநாதன் கயநிதி பாலன் கலந்து கொண்டுள்ளார். அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார், நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின் குமார், சிறுவர் நீதிமன்ற நீதவான் நிரஞ்சனி முரளிதரன், வடமாகாண தொழில் நியாய சபை தலைவர் தாரணி கணேசமூர்த்தி, உட்பட நீதிமன்ற பணியாளர்கள் உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காரைதீவு
காரைதீவு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் 2026 ஆம் ஆண்டின் கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வானது பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் இன்று (1.1.2025 ) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சத்தியப்பிரமானம் எடுத்துக் கொண்டதுடன் தவிசாளரினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் இன்று(1) இடம்பெற்றுள்ளது.

கல்முனை பிரதேச செயலகம்
2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில், பிரதேச செயலக கணக்காளர் எம்.எஸ்.அமீர் அலி, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்.ஏ.எல்.ஏ. மஜீத் நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.அன்வர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா உட்பட கிளைத் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

மண்முனைப்பற்று பிரதேச சபை
புதிய ஆண்டில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று(1)மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சிமன்றங்களில் இடம்பெற்ற நிகழ்வில், மண்முனைப்பற்று பிரதேசசபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேசசபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
