ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு முல்லைத்தீவில் நினைவஞ்சலி

Tsunami
By Independent Writer Dec 26, 2020 08:52 PM GMT
Report

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருந்தனர்.

உயிரிழப்புகள் மாத்திரமின்றி பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிவடைந்த இந்த துன்பியல் நிகழ்வான ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளன.

இவ்வாறு பதினாறு ஆண்டுகளை கடந்துள்ள போதிலும் உயிரிழந்த தங்களுடைய உறவுகளை நினைந்து நாடளாவிய ரீதியில் வருடம் தோறும் இந்த ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றதோடு அங்கு உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் கலந்து கொண்டு தமது உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

உறவுகள் தங்களுடைய உறவுகளை நிறைந்து உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சுகாதார நடைமுறைகளை பேணி உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மு.ப 9.20மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தேசிய கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் சுடரேற்றி சுனாமி பேரவையினால் உயிரிழந்த மக்களிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசியுரையுடன் சுனாமி நினைவலைகளின் மீள்பார்வை தொடர்பான காட்சிப் பதிவுடனான கருத்துரை இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலர், மாவட்ட செயலக கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US