பாணந்துறையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட நபர்
பாணந்துறையில் நேற்று (31.05.2023) இரவு ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் பாணந்துறை மோதரவில சுனாமி வீடமைப்பு வளாகத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் பாணந்துறை ஹொரண வீதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக நின்று கொண்டிருந்த போது சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தலையில் பல தடவைகள் தாக்கப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் விசாரணை
அந்தத் தாக்குதல்களுக்கு மத்தியில் காயமடைந்த நபர் ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். எனினும் அவரை துரத்தி சென்று கூரிய ஆயுதங்களால் மீண்டும் மீண்டும் தாக்கிய போது அந்த நபர் கீழே விழுந்துள்ளார்.
பாணந்துறை குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையை செய்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri