கொழும்பின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வளிக்க அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை
லோட்டஸ் குறுக்கு நுழைவாயில் மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் போக்குவரத்து நெரிசல்களைக் குறைப்பது பற்றிய சாத்தியவளக் கற்கையை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அண்டிய பிரதேசங்களில் குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் மோட்டார் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்ற இடமாக மாறியுள்ளதுடன், அதனால், நகரப் போக்குவரத்து வலையமைப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் துறைமுக நுழைவு மேல் வீதி முழுமையாக இயங்குநிலைக்கு கொண்டுவருவதும், கொழும்பு நகரத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்மு வருகின்ற முக்கிய அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்தி செய்வதால் இப்பிரச்சினை மேலும் மோசமடையுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.
துறைமுக நுழைவு மேல்வீதி
குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, துறைமுக நுழைவு மேல்வீதியின் சாய்வு மற்றும் கடலுக்கு அண்டிய வீதியை நீடித்தல் உள்ளிட்ட, இணைப்புச் செய்கின்ற பிரதான பாதையுடனான தொடர்பை மேம்படுத்தல் மற்றும் லோட்டஸ் சுற்றுவட்டப் பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான நிரந்தரத் தீர்வுகளைத் தயாரிப்பதற்கான ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விபரங்களுடன் கூடிய சாத்தியவளக் கற்கையை மேற்கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட பெறுகை முறைமைகளைக் கடைப்பிடித்து ஆலோசனைச் சேவை நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
