கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு: மற்றுமொரு குற்றக் கும்பலின் அட்டகாசம்
கொழும்பு - கிராண்ட்பாஸ், நாகலகம வீதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒரு குற்றக்கும்பலினால் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ், நாகலகம் வீதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு கும்பலுக்கிடையிலான முறுகல்
அத்துடன், காயமடைந்தவர்கள், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மோதரா நிபுனா என்பவரின் இரண்டு சீடர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறில் நடந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கமைய, மேடற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூடு மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான சேதாவத்தே கசுங்கே என்பவரின் பிரிவினரால் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri