கொழும்பு - பதுளை வீதி போக்குவரத்து தொடர்ந்து தடை: வெளியேற்றப்படும் மக்கள்
கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்றிரவு வீதியின் சீரமைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதால், இன்று (6.11.2023) காலை பணியை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
போக்குவரத்து தடை
பத்கொடை பிரதேசத்தில் நேற்று (05.11.2023) பெய்த கடும் மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்து போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ், வீதி சீரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், பத்கொடையில் ஆபத்தான நிலையில் உள்ள 10 வீடுகளின் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
