Coca-Cola பானத்தை பயன்படுத்தும் புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை
புலம்பெயர் நாடுகளில் வாழ்வோர் Coca-Cola பானத்தை அருந்துவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் தயாரிப்புக்களில் குளோரேட்டு எனப்படும் இரசாயனம் அதிகளவில் கலந்துள்ளமையினால் அவற்றை மீளப்பெறப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் விநியோகிக்கப்படும் Coca-Cola பானத்தை அருந்த வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Coca-Cola பானம்
நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளான கோக், ஃபாண்டா, மினிட் மெய்ட், ஸ்ப்ரைட் மற்றும் டிராபிகோ வகைகள் அடங்குதாக Coca-Cola நிறுவனத்தின் பெல்ஜியம் பிரிவு தெரிவித்துள்ளது.
அடங்கும் என்று கோக கோலாவின் சர்வதேச பாட்டில் மற்றும் விநியோக நடவடிக்கையின் பெல்ஜியக் கிளை தெரிவித்துள்ளது.
குளோரேட்டு நீர் சுத்திகரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதலில் பரவலாக பயன்படுத்தப்படும் குளோரின் கிருமிநாசினிகளிலிருந்து பெறப்படுகிறது.
தைராய்டு பிரச்சினை
அதிகளவு இரசாயன கலவையை வெளிப்படுத்துவது தைராய்டு பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளோரேட்டின் நீண்டகால வெளிப்பாடு சிறுவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை... தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் News Lankasri

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan
