கஞ்சிபானை இம்ரானால் அனுப்பப்படாத செய்தி: பாரதூரமான சூழ்நிலை தொடர்பில் எச்சரிக்கை
கிளப் வசந்த கொல்லப்பட்டதை தொடர்ந்து தற்போது இரு பாதாள உலகக் கும்பல்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் சுவரொட்டி விவகாரம் என்பன மூன்றாம் தரப்பினரின் அற்பமான நாடகம் என திய சுதந்திர கட்சியின் தலைவர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஓஷல ஹேரத் கூறுகையில், இது போன்ற கொலையை திட்டமிட்டு, மலர்மாலை அனுப்பி, சுவரொட்டிகளை ஒட்டும் வல்லமை படைத்த கஞ்சிபானை இம்ரான், காணொளி தொழில்நுட்பம் மூலம் அனைவரையும் அழைத்து ஒரு செய்தியை அனுப்பாதது ஆச்சரியமாக உள்ளது.
எனவே இவ்வாறான அனைத்துச் சூழலையும் கருத்திற் கொண்டு பாதாள உலகக் கும்பலுக்கும் தொடர்பில்லாத வேறு ஒரு தரப்பினரால் இந்த பயங்கரவாதத்திற்கு வித்திடலாம்.
பிரதான சந்தேகநபர்கள்
அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களை பாதுகாப்புத்துறை கைது செய்யும். இல்லையெனில் இந்த தொடர் சம்பவத்தின் கீழ் மேலும் ஒரு பாரதூரமான சூழ்நிலை ஏற்படக்கூடும்'' என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற போது, ''பாதாள உலகக் குழுவின் முன்னாள் தலைவர் மதுஷின் கல்லறைக்கு அருகே, நாம் ஒவ்வொருவராக அனுப்பி வைக்கிறோம். நாம் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள்'' என சுவரொட்டி ஒட்டப்பட்டது.
இதற்கு எதிராக, தெமட்டகொட மகரகம உள்ளிட்ட பல இடங்களில் நேற்று முன்தினம் (14) சில தரப்பினர் சில சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கிளப் வசந்தவின் மனைவி உள்ள மருத்துவமனைக்கு மலர்வளையம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan