சீரற்ற காலநிலையால் அதிகரிக்கும் உயிரிழப்பு!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இதுவரையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 2 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிப்புக்கள்
இதேவேளை 23 மாவட்டங்களில் 99,876 குடும்பங்களைச் சேர்ந்த 335,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளை சேர்ந்த 95 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் 1,708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் 8,678 குடும்பங்களைச் சேர்ந்த 27,717 பேர் தங்களது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் 279 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.





30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
