முல்லைத்தீவில் Clean Sri Lanka திட்டத்தின் நடமாடும் சேவை..
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean Sri Lanka செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு என்பன “க்ளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக நடமாடும் சேவைகள் மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் நேற்றைய தினம்(05) முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நடமாடும் சேவையினை வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கி வைத்தனர்.
இந்த நடமாடும் சேவையில் பல்வேறு சேவைகள், பணிகள் மக்களுக்கு ஒரே நாளில் முன்னெடுக்கப்பட்டது இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
• அரச சேவைகளுக்கு பொதுமக்கள் எளிதில் அணுகும் வசதி ஏற்படுத்துதல்,
• சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்த்தல்,
• மக்கள் நேய வினைத்நிர்வாக அமைப்பை வலுப்படுத்தல்.
இத்திட்டம் மூலம்:
• பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்கும் அமைப்பை உருவாக்குதல்,
• சமூக மட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்,
• சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் தரமான நிர்வாகத்தை மேம்படுத்துதல் எனும் நோக்கங்கள் அடைவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகள்:
• பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள்
• ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை)
• ஓய்வூதியம் தொடர்பான சேவைகள்
• மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள்
• வியாபார பெயர்ப் பதிவு தொடர்பான சேவைகள்
• காணி தொடர்பான சேவைகள்
• சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்
• முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்
• சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான சேவைகள்
• வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு தொடர்பான சேவைகள்
• திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள்
• மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்
• கைத்தொழில் திணைக்களம் தொடர்பான சேவைகள் • கிராம அபிவிருத்தி பிரிவு தொடர்பான சேவைகள்
• சமய, கலாசாரப்பிரிவு தொடர்பான சேவைகள்
• பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள்
• கமநல சேவைகள் திணைக்களம் தொடர்பான சேவைகள்
• ஆயுள்வேத திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்
• விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்
• கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்
• மின்சார சபை தொடர்பான சேவைகள்
• நீர் வழங்கல் அதிகார சபை தொடர்பான சேவைகள்
• தென்னைப் பயிர்ச் செய்கை சபை தொடர்பான சேவைகள்
• பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் முதலானவை இடம்பெற்றது.
இவற்றுடன் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரத்திணைக்களத்தின் விசேட மருத்துவமுகாம், பொதுமக்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் கலாசார நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றிருந்தது.
அதேநேரம் அண்மையில் ஏற்ப்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதுடன் வெள்ளத்தால் நீரில் மூழ்கிய வீட்டினை சுத்தம் செய்வதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் காசோலையும் வழங்கிவைக்கப்பட்டது.
அத்தோடு வறுமையில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கப்பட்டிருந்தது.
இன்றையதினம் துணுக்காய், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று முதலான பிரதேச செயலகங்களில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நடமாடும் சேவையில் பெருந்திரளான மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தார்கள்.






