போர்க்கால குற்றங்களை ஆராயும் சந்தர்ப்பங்களில் கிளர்ந்தெழும் சக்திகள்! சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ள கருத்து..
போர்க்கால குற்றங்கள் மற்றும் அச்சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கும்- ஊடகங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் பேசப்படும் போது அது குறித்து விசாரணைகள் நடத்த ஆரம்பிக்கப்படும் போது அதற்கெதிராக இவ்வாறான குழப்பம் நல்லாட்சி அரசாங்கத்திலும் ஆரம்பிக்கப்பட்டது.
அதே சாயலில் அதே கூட்டமே இன்றும் கிளர்ந்தெழுந்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகாலக் கிளர்ச்சியின் உறுப்பினர்இ சமூக-அரசியல் - மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சுனந்த தேசப்பிரிய (Sunanda Deshapriya) தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர் புதிதாக உருவாக்கப்பட்ட சிவில் சமூகத்தின் எழுச்சிஇ சில இனவாதிகளை சவாலுக்குட்படுத்தியது. தற்போதைய குழப்பத்திற்கு இதுவும் காரணம் என நினைக்கிறேன்.
ராஜபக்ஷ குடும்பம் இன்று மிகப்பெரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இவர்கள் சிறையிலா இல்லையா என்று சொல்ல முடியாது. அவர்கள் அனைவருக்கும் பெருமளவிலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
நல்லாட்சியை ஞாபகப்படுத்தும் பிக்கு போராட்டம்
நான் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவருக்கு ஒரு ஜனநாயக சிந்தனை இருந்தது. தன் நிலையைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை.முற்றாகச் சீரழிந்து போனார்கள்.
இறுதியில் அவர் சிங்கள பௌத்த மகாராஜாவாகவே வெளிப்படத் தொடங்கினார். 2015 ஆம் ஆண்டும் சமூகத்திற்கு நீதி- நியாயத்தை வழங்குவதற்கும் போர்க்கால குற்றங்களுக்கு எதிராகவும் விசாரணைகள் ஆரம்பிக்கும் போது கிளர்ந்தெழுந்த சக்திகள்தான் இன்றைக்கும் வந்துள்ளன.
இது ஞானசார தேரரைக் காப்பாற்றுவதற்காகச் செய்யப்படும் விடயம் அல்ல. அவரின் பெயரில் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கே பார்க்கிறார்கள்.

ஏனெனில் நமது சமூகம் மிகவும் கடினமாகப் பிளவுபட்டுள்ளது நான் ஜெனீவாவிற்குச் சென்றிருந்த போது 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 100 க்கும் மேற்பட்ட அறிக்கைகள் உள்ளன. நானும் 50 - 60 அறிக்கைகள் எழுதியிருப்பேன்.
ஆனால் எதுவும் நடக்கவில்லையே. அது நடக்காததற்குக் காரணம் நமது சமூகத்தில் உள்ள இந்தப் பிளவுதான். உண்மையில் எந்தவொரு அரசாங்கத்திற்கும் இது மிகவும் கடினம். இந்தப் பிளவுக்கு வெளியில் சென்று எதையாவது செய்தால் ஆட்சி அதிகாரம் இல்லாமற்போகும்.
தெற்காசியாவில் நாம் வாழும் சமூகத்தில் அடிப்படை அமைப்பியல் மாற்றம் எதுவும் நிகழவில்லையே. அதே அரசுதான் தொடர்கிறது. எனவே அந்த அரசே தொடர்வதால் அதைத்தான் இவர்கள் அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
உண்மையில் நாம் பார்க்கவேண்டியது என்னவென்றால் ஞானசார தேரருக்குப் பின்னால் இருக்கும் சக்திக்கு இதைவிடப் பெரியதொரு நோக்கம் உள்ளது அதாவது ஏதேனுமொரு வகையில் சீர்திருத்தங்கள் ஏற்படப் போகிறது என்றால் ஏதேனுமொரு வகையில் நீதியும் நியாயமும் இந்தச் சமூகத்திற்கு கிடைக்கப்போகிறது என்றால் அதைத் தடுப்பதுதான் இந்தச் செயற்பாடுகள் என குறிப்பிட்டுள்ளார்.
பிக்குகள் வெளியேறினால் சிங்கள மக்களும் வெளியேறலாம் - நினைவுபடுத்தப்படும் ஜுலை கலவரம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை