அரச ஊழியர்கள் 10 நாட்கள் பணியாற்ற அனுமதி - நாளை முதல் புதிய நடைமுறை
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவலுக்கு மத்தியில் அரசாங்க ஊழியர்களை மட்டுப்படுத்தப்பட்ட நாட்களில் பணிக்கு அழைக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளைய தினமான மே முதலாம் திகதி முதல் அரச ஊழியர்கள் 10 நாட்கள் மாத்திரமே பணி செய்ய வேண்டும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கோவிட்டுக்கு மத்தியில் அரச ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் பணியாற்ற வேண்டும் என்ற சுற்றரிக்கமைய மே மாதத்தில் 18 நாட்களே பணியாற்ற வேண்டும். எனினும் ஒரு ஊழியர் மே மாத்தினுள் 10 நாட்கள் மாத்திரம் பணிக்கு வர வேண்டும் எனவும் ஏனைய நாட்களை சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை மற்றும் விடுமுறைகளில் பணிக்கு அறிவிக்கலாம்.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமைக்கு மத்தியில் அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் போது நிறுவனங்களின் பிரதானிகளின் அவசியத்திற்கமை அழைக்க வேண்டும்.
நிறுவனத்தின் பிரதானிக்கு அவசியம் என்னறால் ஒரே ஊழியரை வாரத்திற்கு 5 நாட்களும் அழைக்க முடியும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam