நீதிமன்றம் செல்லவுள்ள நகரசபை: ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றம்
பருத்தித்துறை நகரசபையினாரால் பணியாளருக்கு வழங்கப்படவேண்டும் என்ற 40 வீத சம்பள அதிகரிப்புக்கு நிதியின்மை காரணமாக சபையால் நிதி வழங்க முடியாதுள்ளதனால் நீதிமன்றை நாடுவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு அதன் தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் இன்று(30) காலை 9:15 மணியளவில் ஆரம்பமானது.
இதில் முதலாவதாக கடந்த கூட்ட அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட. நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
கொடுப்பனவு
இதனையடுத்து, ஊழியர்களுக்கான 40 வீதமான கொடுப்பனவு அதிகரிப்பை வழங்கவேண்டும் என்று வழங்கப்பட்ட சுற்றுநிருபம் தொடர்பாக ஆராயப்பட்டு அதனை வழங்குவதற்கு நிதி சபையிடம் இல்லை என்றும் இதனால் மத்திய அரசின் சுற்றுநிருபத்தை மன்றினூடாக ரிட் சவாலுக்கு உட்படுத்துவதென்றும் வர்த்தகர்களால் வழங்கப்பட்ட மனு தொடர்பாக ஆராயப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின், சமர்ப்பணங்கள், கட்டளை தொடர்பாக நகரசபை உறுப்பினர் சந்திரசேகர் வாசித்து தனது வாதங்களை முன்வைத்தார்.
அதற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து ஜெயகோபி தனது கருத்தில் அங்கு ஒருவழிபாதை, சிறிய வீதி, நீர் தேங்கிமிடம் போன்றவை நிவர்த்தி செய்ய முடியாத குறைபாடுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
தீர்மானம் நிறைவேற்றம்
இந்நிலையில் சபையினால் பழைய இடத்திற்கு மாற்றுவதென தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு சபையால் நவீன சந்தை பகுதியில் கீழ் தளத்தில் அமைப்பது தொடர்பாக ஆய்வுக்காக நிபுணர்குழு ஒன்று நியமிக்கப்பட்டதாகவும் அதன் முடிவு வரும்வரை ஏற்கனவே ஏடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுதுவதென்றும், நகரசபையின் கழிவகற்றல் தொடர்பாக ஆராயப்பட்டு உரிய தரப்புக்களை அணுகி கழிவகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றும், முனை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் மகிழ்வகத்தில் சிறுவர்கள் வீதிக்கு செல்லாது பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது என்றும், அங்கி சிறுவர்களுக்குரிய பூங்கா என அறிவிப்பதென்றும், சபைக்கான சட்டத்தரணி ஒருவரை ஏல அடிப்படையில் பணிக்கு அமர்த்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் பல்வேறு நிதிசார் கொடுப்பனவு தீர்மானங்ளும் நிறைவேற்றப்பட்டன.




போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri