ரஷ்யா படைகளுக்குள் சீன இராணுவத்தினர்! வெளியாகிய முக்கிய காணொளி
உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்துவரும் தாக்கதல்களில் சீனாவின் வீரர்களும் காணப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதில் 155 சீனர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவுடன் இணைந்து போரிடும் சீனர்களின் கடவுச்சீட்டு விபரங்கள் பெயர்கள் என்னிடம் உள்ளன எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சீனாவின் இந்த நடிவடிக்கை பாரதூரமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
Zelensky: We have captured two Chinese soldiers on Ukrainian territory.
— Tymofiy Mylovanov (@Mylovanov) April 8, 2025
We have their documents, even credit cards. They are citizens of China.
I believe the United States of America needs to pay more attention to what is happening today. 1/ pic.twitter.com/Hd2orgt3Tj
சீன இராணுவத்தினர்
இந்நிலையில், சீனா இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளதுடன்,இருவது கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
சீனா அரசாங்கம் தனது பிரஜைகள் போர்க்களங்களை தவிர்க்கவேண்டும், எந்த வித ஆயுதமோதலிலும் இணைந்துகொள்ளக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட இரண்டு சீன இராணுவத்தினரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை காண்பிக்கும் வீடியோவை உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
இங்கு என்ன நடக்கிறது என்பதில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சீனப்பிரஜையொருவர் தான் சரணடைந்தவேளை ரஷ்ய படையினர் எரிவாயு குண்டுகளை தன்மீது வீசியதாகவும் தான் உயிரிழக்கப்போகின்றேன் என அச்சமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Two captured Chinese soldiers spoke out from Ukraine.
— Tymofiy Mylovanov (@Mylovanov) April 9, 2025
One claimed he had never even held a gun before.
Second said he passed out from Russian gas - and Ukrainians saved his life.
1/ pic.twitter.com/7sR0vlF2vf
மேலும் கைதுசெய்யப்பட்ட ஒருவர் ரஷ்ய படையில் இணைவதற்காக தரகர் ஒருவருக்கு 2700 அமெரிக்க டொலர்களை வழங்கியதாகவும் உக்ரைன் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.