இலங்கை வருகின்றார் சீன பிரதமர்!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு வரவுள்ளார். இவரது விஜயம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 திகதி இடம்பெறவுள்ளது.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடவுள்ளார் .
சீன பிரதமர் துறைமுக நகரின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது கொழும்பு துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குழு விவகாரம் மற்றும் சீனாவின் பொறுப்புகள் என்பது குறித்து உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.
அத்துடன், அதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்படவுள்ளது. கொழும்பு துறைமுக நகர் குறித்து தேசிய அரசியலிலும் சர்வதேச அரங்கிலும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ள நிலையில் சீன பிரதமர் இலங்கை வருகிறார்.
துறைமுக நகருக்கு சீனா கொடுத்துள்ள முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலேயே சீன அரசு உயரிய பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam