133 பயணிகளுடன் எரிந்து விபத்திற்குள்ளாகிய சீன விமானம்! ஏராளமானோர் பலி (Video)
133 பேருடன் பயணித்த சீன விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்றே இவ்வாறு, தென் சீனாவில் உள்ள தெங்சியான் கவுண்டி பகுதியில் மலையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், ஏராளமானோர் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணி இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
வுஜோ மாகாணத்தில் உள்ள டெங் கவுண்டி அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குவாங்சி என்பது தென் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரானன குவாங்சோவின் அண்டை மாகாணமாகும்.
Update: Boeing plane with 132 people onboard crashes in S.China's Guangxi. Casualties unknown. (Video via People's Daily) https://t.co/LQ97EFvX2k pic.twitter.com/lSSU3AD86y
— Global Times (@globaltimesnews) March 21, 2022
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 4 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam