சீன உர கப்பல் வழக்கு தொடர்பில் சந்தேகம்: சுனில் ஹந்துன்நெத்தி
சீன உர கப்பல் வழக்கில், வழக்கும் அரசாங்கத்திடம், வழக்கு போடப்பட்ட பொருளும் அசசாங்கத்திடம் இருக்கின்ற நிலையில் வழக்கு தாக்கல் தொடர்பில் பெரிதும் சந்தேகம் ஏற்றப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
திருகோணமலைக்கு விஜயம் செய்த நிலையில் அங்கு வைத்து கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் ஜீ.எல்.பீரிஸிற்கு அவருடைய கடமை மற்றும் சட்டம் தொடர்பில் நான் அவருக்கு சொல்லிக் கொடுக்க தேவையில்லை.
நேற்று முன்தினம் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார், சீன உர நிறுவனத்துடன் எமக்கு இருக்கும் தொடர்பு வணிகம் மாத்திரமே இதனால் நட்டிற்கு எந்த ஒரு அவமானமும் இல்லை என.
நான் அவரிடம் கேட்கின்றேன் நாட்டிற்கு அவமானம் இல்லா விட்டால் சீன தூதரகத்தில் கூடிய கூட்டம் எதற்கு? இதேபோன்று ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு தூதரகத்திற்கு சென்று குழப்பம் விளைவித்தால் மக்கள் எவ்வாறு வியாபாரம் செய்வது?
சீனாவுடன் வியாபார கொடுக்கல் வாங்கல் என்றால் ஏன் மக்கள் வங்கியினை கருப்பு பட்டியலில் இணைக்க வேண்டும்? இவ்வாறான செயற்பாடு உங்களை ஆட்சிக்கு அமர்த்திய மக்களை ஏமாற்றும் செயல் என தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam