இலங்கையில் ஆட்டத்தை ஆரம்பித்த சீனா! இந்தியாவிற்கு ஏற்பட்ட தலையிடி!!
இலங்கை அரசியலில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டுக்கொண்டுள்ள காலகட்டம் இது. இலங்கையின் தேசிய அரசியலிலும் சரி, இலங்கை சார்ந்த சர்வதேச அரசியலிலும் சதுரங்க ஆட்டங்கள் மிகக் கச்சிதமாக இடம்பெற்றுக் கொண்டுள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேசிய அரசியலை ஒரு பக்கம் வைத்துவிட்டு சீன வெளி விவகார அமைச்சரின் இலங்கை விஜயம் சார்ந்த சர்வதேச நகர்வுகள் மீதே பார்வையைத் திருப்ப வேண்டியுள்ளது.
இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ இலங்கை வந்துள்ளார். ஆனால் இது அவரது இலங்கைக்கான தனிப்பட்ட விஜயம் அல்ல. அவரது விஜயத்தில் இலங்கையும் ஒரு தரிப்பிடம் அவ்வளவுதான்.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது உண்மையின் அலசல் தொகுப்பு,