தாய்வான் நீரிணையில் அமைதி நிலவ கரம் கோர்த்த சீனா
தாய்வான் நீரிணை என்பது போர் மேகங்கள் சூழும் இடமாகவோ அல்லது வெளிநாட்டு சக்திகளின் சதுரங்கக் களமாகவோ இருக்கக்கூடாது. மாறாக அது குடும்ப உறவுகளையும் நம்பிக்கையையும் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்" என தாய்வானின் முக்கிய எதிர்க்கட்சியான குவோமிண்டாங் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங் லி-வுன் தெரிவித்துள்ளார்.
செங் லி-வுன் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை பெய்ஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்' வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டிற்குப் பிறகு சீன ஜனாதிபதியைச் சந்திக்கும் மிக உயரிய தாய்வான் அரசியல் தலைவராக செங் கருதப்படுகிறார்.
மோதல்
இந்தச் சந்திப்பின் போது, இரு தலைவர்களும் தாய்வான் சுதந்திரத்திற்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு, நீண்டகாலமாக நீடித்து வரும் மோதல்களை அமைதியான முறையில் தீர்க்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.
ஜனாதிபதி சீ ஜின்பிங் பேசுகையில், "தாய்வான் மக்களும் சீன மக்களும் ஒரே இரத்த உறவுகள்; நமது பொதுவான கலாச்சாரம் மற்றும் வரலாற்றை யாராலும் அழித்துவிட முடியாது" என்று குறிப்பிட்டார்.

மேலும், தாய்வான் தனது இராணுவப் பலத்தைப் பெருக்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைச் செங் மறைமுகமாக ஆதரித்தார்.
குறிப்பாக, அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்காகத் தாய்வான் அரசு ஒதுக்கியுள்ள 40 பில்லியன் டொலர் பட்ஜெட்டை எதிர்க்கட்சியான KMT தொடர்ந்து தடுத்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam