லண்டனில் திடீரென வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகள்! நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நியூயோர்க் மற்றும் லண்டன் வைத்தியசாலைகளில் கொரோனா பாதிப்பால் சிறார்கள் அனுமதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் வேகமாக பரவி வரும் நிலையில், இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நியூயோர்க் நகர மருத்துவமனைகளில் திடீரென்று சிறார்கள் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து பரிந்துரைக்கப்படும் ஒரு ஆய்வில் குழந்தைகள் ஒமிக்ரோன் தொற்றால் அதிகம் பாதிக்கப்படலாம் என்றே தெரியவந்துள்ளது.
இதன்படி, குழந்தைகள் ஒமிக்ரோன் நோய்த்தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் 2020ல் கொரோனா முதல் அலையை விட 20 சதவீதம் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.
நோயாளிகள் மருத்துவமனையை நாடும் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே தொற்றின் தன்மை கணக்கிடப்படுவதாக சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து சிறார்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், இருப்பினும் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் சிறார்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதும் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri