4 வயது சிறுமியின் உயிர்காக்க இன்னும் 3 வாரங்களே உள்ளது - உதவுங்கள்!
நான்கு வயது நிரம்பிய பிரித்தானியா வாழ் சிறுமி இஷா, கொடுமையான இரத்தப்புற்று நோய்க்கு (Acute Myeloid Leukaemia) உள்ளாகி கடந்த 15 வாரங்களாக Great Ormond Street சிறுவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையிலும், சிறுமியைத் தாக்கியுள்ள நோயில் மாற்றம் ஏற்படவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
2 தடவை நடைபெற்ற வேதிச்சிகிச்சை (Chemotherapy) பயனளிக்காத நிலையில், 4 வயது நிரம்பிய இச்சிறுமியைத் தாக்கியுள்ள கொடுமையான இரத்தப்புற்று நோய்க்கு "தண்டு உயிரணுத் தானம்" (Stem Cell Donation ) மூலமே சுகமாக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சிறுமியின் உயிர்காக்க 3 வாரங்களே உள்ள நிலையில், அதற்குள் பொருத்தமான தண்டு உயிரணுத் தானம் செய்யக்கூடிய நபரை (Stem Cell Donor ) அடையாளம் காணவேண்டிய மிகவும் இக்கட்டான சூழ்நிலை எழுந்துள்ளது. சிறுமி இஷாவின் இனம் சார்ந்த நபர்களில் மாத்திரமே பொருத்தமான நபரைத் தேர்ந்தெடுக்கலாம்.
தண்டு உயிரணுத் தானம் என்பது மிகவும் இலகுவான (Non invasive) வழிமுறை ஆகும்.
இச்சிறுமியின் உயிரை நீங்கள் காப்பாற்ற விரும்பினால், இச்சிறுமிக்கு நீங்கள் பொருத்தமான நபரா (Matching Donor) என வெறும் 2 நிமிடங்களில் கண்டறிந்துவிட முடியும்.
கீழ்காணும் இணையம் மூலம் உங்களை பதிவுசெய்து, இச்சிறுமியின் உயிரினை காக்க உதவுங்கள்.
https://www.dkms.org.uk/en/register-now
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
Red Card வாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறிய கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்... யார் அதிகம் பாருங்க Cineulagam
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan