பரிதாபமாக உயிரிழந்த சிறுமி - சோகத்தில் உறவினர்கள்
உடவலவ பிரதேசத்தில் 3 வயது சிறுமி மீது கட்டிலின் பலகை ஒன்று விழுந்து உயிரிழந்துள்ளார்.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற திடீர் மரண விசாரணையில் மரணத்தின் காரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடவலவ, தெற்கு கால்வாய் பகுதியைச் சேர்ந்த கயுமி எனிஞ்னா பத்திரன என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சத்திர சிகிச்சை
சிறுமியின் வீட்டுக்கு அருகில் உறவினர் வீட்டில் அன்னதானம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த வீட்டில் ஏனைய சிறுவர்களுடன் இந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தேக்க மரத்தால் ஆன கட்டிலின் ஒரு பகுதி சிறுமியின் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த சிறுமி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் சம்பவம் இடம்பெற்று 11 நாட்களின் பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
