வவுனியா பொது வைத்தியசாலைக்கு வட மாகாண பிரதம செயலாளர் விஜயம்
தைப்பொங்கல் தினமான நேற்று (14) வவுனியா பொது வைத்தியசாலைக்கு வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன விஜயம் மேற்கொண்டிருந்தார்.
வவுனியா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் மற்றும் ஆளுநரின் பரிந்துரைக்கமைய பிரதம செயலாளரினால் வைத்தியசாலையின் கட்டிடப் பராமரிப்புக்கு ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரூபா வேலைத்திட்டங்களை இதன் போது பார்வையிட்டிருந்தார்.
இதேவேளை குறுகிய காலத்தில் வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் வவுனியா பொது வைத்தியசாலையின் நிர்வாகத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்த பிரதம செயலாளர் மேலும் வைத்தியசாலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தார்.
இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் தாதிய பரிபாலகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வைத்தியசாலையின் விபத்துப் பிரிவின் முக்கியத்துவம் மற்றும் அதன் கட்டிட நிர்மாணம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது குறித்த பகுதியின் மேம்படுத்தல் சேவைக்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதம செயலாளர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை வவுனியா வைத்தியசாலையின் துரித அபிவிருத்தி மேம்பாடுகள் வட மாகாண
வைத்தியசாலைகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan