இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்: யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்(Photo)

Jaffna Prof G L Peiris Tamil nadu India Northern Province of Sri Lanka
By Theepan Jun 14, 2022 12:44 PM GMT
Report

இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் மனுவொன்றை கையளிக்க வடக்கு கடற்றொழிலாளர்கள் தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று(14) நடைபெற்ற கூட்டத்துக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவைப் படகுகள்

இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்: யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்(Photo) | Chief Minister Tamil Nadu Indian Tug Boats

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்திய இழுவைப் படகுகளை தடுக்ககோரி நாம் மிகப்பெரிய போராட்டங்களை செய்ததுடன், மனுக்களை அனுப்பியும் வடக்கு கடற்றொழில் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.

இருப்பினும் நாங்கள் தொடர்ந்து தீர்வு கிடைக்கும் வரை எங்கள் இறையாண்மையை பாதுகாப்பதற்கு பொருளாதார நெருக்கடியை தாண்டி போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம்.

இதனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் மக்களுக்கான உரிமைக்காக குரல் கொடுக்கின்ற தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் உணர்வாளர்களுக்கும் தமிழகம் கட்சித் தலைவர்களுக்கும் இந்த நேரத்திலே தயவாக தெரிவிக்க விரும்புகிறோம்.

மனு

இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்: யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்(Photo) | Chief Minister Tamil Nadu Indian Tug Boats

விசைப்படகுகளை எமது கடல் எல்லைக்குள் வராது தடுத்து நிறுத்தி எம்மை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற செய்தியை தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரிடமும் விடுக்கின்றோம்.

தமிழகத்தில் காணப்பட்ட மீன்பிடி தடைக்காலம் முடிவடையவுள்ள நிலையில் இந்திய மீனவர்கள் இலங்கை பகுதிக்குள் அத்துமீறலாம் என்பதால் அதனை கட்டுப்படுத்த கோரியே தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்க்கும் ஒரு கடிதத்தை நாளைய தினம் அனுப்ப உள்ளோம்.

இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்: யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்(Photo) | Chief Minister Tamil Nadu Indian Tug Boats

மேலும், இழுவை படகுகள் எமது கடலுக்குள் வந்தால் நாம் மிகுந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாம் மீன்பிடி உபகரணங்களை வடக்கில் பெறுவது மிகவும் அரிதானது. அது கிடைத்தாலும் அதிக விலைக்கே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US