மூடி மறைக்கப்படும் செம்மணி விவகாரம்! காரணங்கள் கூற முனையும் அரசு
செம்மணி விவகாரம் மீண்டும் மிகவும் நேர்மையாக ஆராயப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (19.07.2025) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டு அநீதிகளுக்கான நீதி நெறிமுறைகள் கிடைக்க வேண்டும்.
ஒரு சர்வதேச நீதி பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு தமிழ் மக்களுக்கு இந்த விடயத்திலே அவர்கள் எதிர்கொண்ட இழப்புகளுக்கான முடிவுகள் கிடைக்கப்பெற வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும்,




