யாழ்.சாவகச்சேரி சமுர்த்தி வங்கி அமைவிட விவகாரம் : களத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ்
யாழ்ப்பாண (Jaffna) சாவகச்சேரி பிரதேச சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை வழங்குவதில் பிரதேச செயலகம் மற்றும் நகர சபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் இழுபறி நிலைக்கு தீர்வுகாணும் வகையில் குறித்த அமைவிடத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) கள விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பிரச்சினைக்கான தீர்வை மையப்படுத்தியும் பொது மக்களுக்கு ஓர் இலகுவான சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலும் அமைச்சரின் இந்த நேரடி கள விஜயம் இடம்பெற்றுள்ளது.
இந்த விஜயத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன் , மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளர் சத்தியசோதி, கூட்டுறவு ஆணையாளர் தேவனந்தினி பாபு, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர் , நகர மற்றும் பிரதேச சபை செயலாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
