சாள்ஸ் எம். பியுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு
நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் மன்னார் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.
குறித்த விஜயமானது இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டறிந்து கொண்டனர்.
மேலும், மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜஸ்ரின் துரமும் இச் சந்திப்பில் கலந்துகொண்டார்.
தேர்தல் கண்காணிப்பு குழு
இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சை நேற்று சந்திதிருந்தனர்.
குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், இவர்கள் அரச தலைவர்களுடனான சந்திப்புக்கு மேலதிகமாக தேர்தல் பிரசார கூட்டங்களையும் கண்காணித்து வருகின்றனர்.
தேர்தல் பிரசார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய செயல்பாடுகள் தொடர்பிலும் இவர்கள் அவதானம் செலுத்தி இருந்தனர்.
அத்துடன், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி கூட்டம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |