இலங்கையின் விவசாயத்துறைக்கு வைத்தியர்களின் ஆலோசனை - தொடர்ந்து சுமத்தப்படும் குற்றச்சாட்டு
இலங்கையில் விவசாயத்துறை தொடர்பில் வைத்தியர்களின் ஆலோசனைக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் (P. Harrisan) வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளார் சந்திப்பில் பங்கேற்ற அவர், அரிசியை இறக்குமதி செய்யப்போதில்லை என்று தொிவித்திருந்தார்.
இறக்குமதி செய்யப்பட்டால், தாம் பதவி விலகிவிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
எனினும் பின்னர் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.
இரசாயனப் பசளைகளை இறக்குமதி செய்யப்போவதில்லை என்று விவசாய அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தற்போது தேயிலை, இறப்பா் மற்றும் தெங்குப் பயிர்செய்கைக்காக தமது முன்வைத்த காலை பின்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இங்கு விவசாயத்துறை அமைச்சரின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக, விவசாயத்துறையைப் பற்றி எதுவுமே தெரியாத வைத்தியார்களே விவசாயத்துறை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) ஆலோசனை வழங்குகின்றனர்.
எனவே விவசாய அமைச்சரின் தீர்மானங்களுக்கு எவ்வித பயன்களும் இல்லை என்றும் ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விவசாயத்துறைக்கு ஆலோசனை வழங்கும் இந்த வைத்தியர்களே முன்னர் சுகாதாரத்துறையிலும் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்த முனைந்ததாக ஹரிசன் குற்றம் சுமத்தினார்.