இலங்கையில் காற்றின் தரத்தில் மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலநிலைக்கு ஏற்ப இந்த தன்மை அவ்வப்போது மாறலாம் எனவும் இன்று (17) வளி மாசு நிலைமை ஓரளவுக்கு குறையலாம் என நம்புவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டிய காற்று மாசுபாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காற்றின் தரம்
இந்தியா அல்லது பிற ஆசிய நாடுகளில் இருந்து வரும் காற்று ஓட்டத்துடன் காற்றின் தரம் மிகவும் சாதகமற்றதாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தக் காலப்பகுதியில் காற்றின் தரம் குறையும் நிலை ஏற்படுவது சாதாரண நிகழ்வு எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வளிமண்டலத்தின் தன்மையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இது ஒரு தற்காலிக நிலை என நம்புவதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
