ஆங்கிலம் தெரியாமல் சர்வதேச மாநாட்டில் தடுமாறிய ஆளும் தரப்பு உறுப்பினர்
நாடாளுமன்றில் நான் மட்டும் தான் 'கபுடாஸ்'(காகம்) என்று நினைத்தேன் ஆனால் அனைவரும் கபுடாஸாகத்தான் இருக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலக பொருளாதார மாநாடு
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றில் ஆங்கிலத்தில் பேச தெரியாது என்று நான் தான் முதலில் தெரிவித்தேன். ஆனால், அண்மையில் உலக பொருளாதார மாநாட்டுக்கு சென்ற அரச தரப்பைச் சேர்ந்த ஒருவர் ஆங்கிலம் தெரியாமல் திக்குமுக்காடினார்.
ஆங்கிலம் தெரியவில்லை என்றால் தெரிந்த ஒருவரை அழைத்துச் செல்லவும். ஒரு சர்வதேச மாநாட்டில் அவ்வாறு நடந்து கொள்வது நாட்டுக்கு உகந்தல்ல.
இந்த நாடு நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் உப்பு இறக்குமதிக்காக நாடாளுமன்றம் விவாதம் நடைபெறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்று நாட்டில் அனைத்து பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. உப்பு இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பேச வெட்கப்படுகிறேன். இது கடல்வளம் அற்ற சூடான் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.