பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
கல்வி அமைச்சின் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (13) இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடநெறியானது தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயம், சிராஜ் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தொழில் வழிகாட்டல்
தேசிய கல்வி நிறுவக வழிகாட்டல்களை கொண்ட பாடநெறியாக ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம், தொழில் வழிகாட்டல் போன்ற பாடநெறிகள் 45 மணித்தியாலங்களை கொண்டதாக மூன்று மாத காலமாக நடைபெற்றுள்ளன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு முழுமையாக பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்போது, மொத்தமாக 107 இளைஞர் யுவதிகள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
அத்துடன், எதிர்காலத்தில் தொழில் துறைகளை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டல்களும் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளன. தொழில்வாண்மையான துறை சார் தொழில்களுக்கு செல்ல குறித்த பாடநெறிகள் தயார்படுத்தப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொழில் வழிகாட்டலுடன் கூடிய சிறந்ததொரு முன்னேற்பாடாக இது அமையப் பெற்றுள்ளது.
மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு போன்றவற்றின் மூலமாக எதிர்கால திட்டமிடலுக்கான ஒரு அடித்தளமாக மாணவர்களுக்கான உகந்த பாடநெறியாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி கலந்து சிறப்பித்துள்ளதுடன்பிரதி திட்டமிடல் பணிகப்பாளர் ஐ.முஜீப், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஐங்கரன் உட்பட மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
[2DTH1PP ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |