மத்திய வங்கியின் செயற்பாட்டினால் கடும் நெருக்கடியில் வங்கிகள்
இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு வட்டி வீதங்கள் ஒரே நேரத்தில் செயற்படுத்தப்படுவதால் வங்கி வைப்புக்கள் தொடர்பில் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தக வங்கியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, இலங்கை மத்திய வங்கியால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள கொள்கை வட்டி விகிதங்கள் வங்கி வைப்புகளுக்கு 11 சதவீதம் மற்றும் கடன்களுக்கு 12 சதவீதமாகும்.
இந்த வட்டி விகிதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி கட்டாயப்படுத்தியுள்ளது.
வைப்புத் தொகை
இருந்த போதிலும்,நாட்டின் பாதுகாப்பான வைப்புத் தொகையாகக் கருதப்படும் திறைசேரி உண்டியல்கள் மீது 20 சதவீத வட்டியை மத்திய வங்கி செலுத்துகிறது.
இதன் காரணமாக வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வைப்புத்தொகையை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வங்கி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி வட்டி தொடர்பில் மத்திய வங்கி இரண்டு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திறைசேரி உண்டியல்
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் 19 சதவீத வட்டி விகிதத்தில் கூட திறைசேரி உண்டியல்களை தேவையான தொகைக்கு விற்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில் நாட்டின் வங்கி வட்டி விகிதங்கள் கண்டிப்பாக அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சில தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர வட்டி விகிதங்கள் 22 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளன.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
