நீண்ட கால தீர்வை முன்வைத்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்: நெருக்கடி தொடருமென எச்சரிக்கை
தற்போது திட்டமிடப்பட்டுள்ள பிரதான பிரச்சினைகளை அடுத்த 6 அல்லது 7 மாதங்களுக்குள் தீர்க்க முடியுமானால் இலங்கையின் பொருளாதாரத்தை சுமார் 12 மாதங்களில் ஸ்திரப்படுத்த முடியுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியுமாயின் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,
அந்நிய செலவணியை செலவழிப்பதை விட அந்நிய செலாவணியை ஈட்டும் நாடாக இலங்கையை மாற்றுவதே தற்போதைய நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாகும்.
இதன்படி இலங்கையின் அந்நிய செலாவணி ஈட்டும் திறனை நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில் மேம்படுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லாதவிடத்து இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடன்களை மீள திருப்பி செலுத்துவதற்கு கடன் வழங்கிய தரப்பிடம் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் கடன் வழங்கிய தரப்புடன் உடன்பாடு எட்டப்படும் வரை வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்துவதற்கு அந்நிய செலாவணி தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| மத்திய வங்கி ஆளுநரின் விசேட கோரிக்கை |
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri