2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி விவகாரம்! மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
நிதி அமைச்சகத்திற்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமான சம்பவத்தினை போன்று மீண்டும் ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதினை தடுக்க மத்திய வங்கியும் நிதி அமைச்சகமும் பணியாற்றி வருவதாக மத்திய வங்கி ஆளுநர் டி.ஆர். நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! சிக்கிய போலி ஆவணங்கள் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி
நிதி அமைச்சகத்திற்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடிக்கும்பலின் கைகளில் சிக்கிய சம்பவம் தொடர்பில் நிதி அமைச்சகம் நெருக்கமாக பணியாற்றி வருகின்றது.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
உத்தரவுகளை மாற்றுவதற்கு உரிமை
இதன்போதுமத்திய வங்கிக்கு ஏதேனும் ஒரு இடத்தில் 'Cross-check' செய்யும் பொறுப்பு வருகிறதா என ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
எனது வங்கிக் கணக்கிலிருந்து என் நண்பரின் கணக்கிற்குப் பணம் செலுத்துமாறு நான் வங்கிக்கு உத்தரவிடும்போது, கணக்கு எண் சரியாக இருந்து, கணினி அமைப்பு மூலமாகப் பணம் செலுத்தப்பட்டால் மட்டுமே வங்கி அந்தப் பணத்தைச் செலுத்த வேண்டும். அதனை மீறி அந்த உத்தரவுகளை மாற்றுவதற்கு வங்கிக்கு உரிமை இல்லை.
வங்கியாளர்களுக்கு வழங்கிய உத்தரவுகளை மாற்றுவதற்கு எந்த உரிமையும் இல்லை. பணம் செலுத்தப்பட்ட பிறகுதான் அதன் உண்மையான மதிப்பு கணக்கிடப்படுகிறது.மறுமுனையில் உள்ள கணக்கு அறிக்கையை எங்களால் சரிபார்க்க முடியாது. அது ஆஸ்திரேலியாவில் உள்ளது, மேலும் அந்த அறிக்கை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குத்தான் சென்றடைய வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து - இரண்டு பேருந்துகள் மோதி விபத்து - பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி