ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி:இன்றைய நாணயமாற்று விகிதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.83 ரூபாவாகவும், கொள்வனவு விலை 360.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியின் தகவலுக்கமைய, பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 389.64 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 374.11 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 451.19 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 434.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால்

குவைத் தினாரின் பெறுமதியானது 1180.73 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 99.09 ரூபாவாக காணப்படுகிறது.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri