உண்மையை வெளிப்படுத்த தாமதம் - மாறுபட்ட சந்தேகத்தை ஏற்படுத்தும் என தேரர் வலியுறுத்தல்
உண்மையை வெளிப்படுத்த தாமதிப்பது மாறுபட்ட சந்தேகத்தை ஏற்படுத்தும் என எல்லே குணவன்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை கோரி நிற்கிறார்கள். இதனை தவறென்று குறிப்பிட முடியாது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதையே அனைத்து தரப்பினரும் கோருகிறோம்.
தலதா மாளிகையில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இதுவரையில் நீதி கிடைக்கப் பெறவில்லை.
அதனை போன்று இந்த சம்பவத்தை மூடி மறைக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் சிறந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.
மேலும், உண்மையை வெளிப்படுத்த தாமதிப்பது மாறுப்பட்ட சந்தேகத்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri