மெசின் சிறையில் உயிரிழந்த கைதி.. அதிகாரிகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டு
பொரளை - மெசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த கைதி, சிறைச்சாலை அதிகாரிகளின் கொடூரமான தாக்குதலினாலேயே உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ஹோமாகம, கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மொஹமட் அஸ்மன் ஜெரால்டின் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
ஏற்பட்ட மோதல்..
கடந்த 6ஆம் திகதி சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து குறித்த கைதி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மேலதிக சட்ட வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 8ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்து, சடலம் மத்தேகொட பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உறவினர்கள், சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட மனிதநேயமற்ற தாக்குதலின் விளைவாகவே அவர் உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.