இரண்டு சக்திகளுக்கு இடையில் பிடிபட்டது - தங்கத்தின் சாத்தியமற்ற பேரியல் தருணம்

Gold Price in Sri Lanka Economy of Sri Lanka Gold
By Sajithra Jun 24, 2026 03:39 PM GMT
Report

இரண்டு சக்திகளுக்கு இடையில் பிடிபட்டது - தங்கத்தின் சாத்தியமற்ற பேரியல் தருணம் | Caught Between Two Powers Gold Moment Greatness

இரண்டு சக்திகளுக்கு இடையில் பிடிபட்டது: தங்கத்தின் சாத்தியமற்ற பேரியல் தருணம் குவோக் டாட் டோங், Exness இன் மூத்த நிதிசார் சந்தைகள் மூலோபாயவாதி எழுதிய சந்தைப் பகுப்பாய்வு. ஒரு வருடத்திற்கு முன்பு சாத்தியமற்றதாகத் தோன்றிய ஒரு விலை அதிகரிப்புடன் தங்கம் 2026 ஆம் ஆண்டைத் தொடங்கியது. இந்த உலோகம் ஜனவரி மாதத்தில் ஓர் அவுன்ஸ் 5,600 USD என்ற புதிய உச்சத்தை எட்டியது.

பின்னர், மார்ச் மாத இறுதியில் அந்த உயர்வில் சுமார் 15% சரிவைக் கண்டு, தற்சமயம் 4,500 USD என்ற ஒரு சிறிய மாற்ற வரம்புக்குள் வர்த்தகமாகி வருகிறது. இந்த வர்த்தகத்தின் இரு தரப்பிலும் உள்ள முதலீட்டாளர்கள், இது தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடையவுள்ளதைக் காட்டும் ஆரம்பமா அல்லது ஒரு நீண்டகால ஏற்றத்தைக் காணவுள்ளதன் தற்காலிக சரிவா என்று யோசித்து வருகின்றனர். நேர்மையான பதில் என்னவென்றால், எந்த முடிவும் இப்போது புரிந்துகொள்ளக்கூடியதாக இல்லை.

இருப்பினும், தங்கம் குறிப்பாக ஓர் ஏற்றத்தையோ இறக்கத்தையோ காணவில்லை; அது இடைநிலையில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்ணளவாகச் சமமான வலிமை கொண்ட இரண்டு பெரிய சக்திகள் இந்த உலோகத்தை இருபுறமும் இழுக்கின்றன. வட்டி வீதங்களை நீண்ட காலத்திற்கு அதிகமாக வைத்திருக்கும் ஃபெடரல் ரிசர்வின் நிலைப்பாடு மேலிருந்து அழுத்தத்தைக் கொடுக்கிறது; அதே நேரத்தில், குறையாத பணவீக்கமும், மத்திய வங்கியின் இடைவிடாத குவிப்பும் அதற்குக் கீழிருந்து ஒரு வலுவான ஆதரவை வழங்குகின்றன.

இந்த இரண்டு சக்திகளில் எதுவும் பின்வாங்கவில்லை. இதன் விளைவாக, சந்தையானது குறிப்பிட்ட எந்தவொரு திசையையும் நோக்கித் தெளிவாகப் பயணிக்க மறுக்கிறது. இது சந்தையின் தீவிரத்தைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்ய முயலும் புல்ஸ் (விலை ஏறும் என நம்புபவர்கள்) மற்றும் பியர்ஸ் (விலை இறங்கும் என நம்புபவர்கள்) இரு தரப்பினரையும் விரக்தியடையச் செய்யும் வகையில் கடுமையான திருப்பங்களை உருவாக்குகிறது.

சக்தி ஒன்று: ஃபெடரல் ரிசர்வின் பிடி ஃபெடரல் ரிசர்வின் தற்போதைய நிலைப்பாடு, இந்த ஏற்றச் சுழற்சியில் தங்கம் எதிர்கொள்ளும் மிகச் சக்திவாய்ந்த எதிர்க் காற்றுகளில் ஒன்றாகும். மத்திய கிழக்கில் சமீபத்தில் ஏற்பட்ட உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிசக்திச் சந்தையின் ஸ்திரமற்ற தன்மைக்கு முன்பு, 2026 இல் இரண்டு முறை வட்டி வீதக் குறைப்பு இருக்கும் என்று சந்தைகள் கணித்திருந்தன.

மார்ச் மாத இறுதியில் அந்த ஒருமித்த கருத்துகணிப்பு முற்றிலும் தகர்ந்துவிட்டது, வட்டி வீதக் குறைப்பிற்கான வாய்ப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது என்று CME FedWatch தரவு காட்டியது, மேலும் சில ஒப்பந்தங்கள் இந்த ஆண்டின் இறுதியில் வரவிருக்கும் வட்டி ஏற்ற விலைகளை முன்கூட்டியே கணிக்கத் தொடங்கியுள்ளன. இது ஒரு வியத்தகு ஊசலாட்டமாகும், தங்கம் இதன் தாக்கத்தை உடனடியாக உணர்ந்தது. பரிமாற்ற வழிமுறை நேரடியானது மற்றும் நன்கு விளங்கிக்கொள்ளப்பட்டதாகும்.

தங்கமானது வட்டி அல்லது ஈவுத்தொகையை வழங்காது, எனவே அமெரிக்கக் கருவூலப் பத்திரங்கள் போன்ற பாதுகாப்பான முதலீடுகள் சிறந்த வருமானத்தை வழங்கத் தொடங்கும்போது, தங்கத்தை வைத்திருப்பதை நியாயப்படுத்துவது கடினம். பத்திரங்களின் வட்டி வருவாய் அதிகரிக்கும்போது, "ஏதாவது சம்பாதிப்பது" மற்றும் "ஒன்றும் சம்பாதிக்காமல் இருப்பது" ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி பெரிதாகிறது, மேலும் தங்கம் இந்த இடைவெளியின் வருவாய் தராத பக்கத்தில் உறுதியாக நிற்கிறது.

அமெரிக்காவின் 10 ஆண்டுகாலப் பத்திர வருவாய் 52 வார வரம்பில் 3.9%–4.6% ஆக உள்ள நிலையிலும், அமெரிக்க டொலர் குறியீடு (DXY) உளவியல் ரீதியான 100 என்ற அளவை நெருங்கி வருவதாலும், வட்டி தராத ஒரு பண்டத்துக்கான சூழல் கடினமாகவே உள்ளது.

தங்கத்திற்குள் மற்றபடி முதலீடு செய்யப்படக்கூடிய மூலதனம், நிலையான வருவாய் தரும் முதலீடுகளில் தனக்கான ஒரு வளமிக்க இடத்தைக் காண்கிறது, மேலும், பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட உண்மையான வருவாயைக் கணக்கிடும் TIPS சந்தை, தற்போது தங்கத்திற்கான மிக நேரடிப் போட்டியாகத் திகழ்கிறது. ஃபெடரல் ரிசர்வின் பிடியை மிகவும் முக்கியத்துவமானதாக மாற்றுவது அதன் தலைமைகுறித்த நிச்சயமற்ற தன்மையாகும். ஃபெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பவல்லின் பதவிக்காலம் 2026 மே மாதத்துடன் முடிவடைகிறது, அவருக்குப் பின் வருபவரின் கொள்கை முன்னுரிமைகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சந்தைகள் இத்தகைய நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, பாதுகாப்பான தேர்வாக அமெரிக்க டொலரை அதிகமாக வாங்கத் தொடங்குகின்றனர், இது தங்கத்தின் குறுகிய கால வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மற்றொரு அடுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சக்தி இரண்டு: முழுமையாகக் குறையாத பணவீக்கம் இதற்கு எதிரான மற்றொரு வாதமும் அதே அளவு வலுவானது.

OECD அமைப்பு அமெரிக்கப் பணவீக்கக் கணிப்பை 4.2% ஆக உயர்த்தியுள்ளது, இது ஃபெடரல் ரிசர்வின் சொந்த இலக்கான 2.7%-ஐ விடக் கிட்டத்தட்ட இருமடங்காகும். இந்த அளவிலான பணவீக்கம் மக்களின் உண்மையான வாங்கும் திறனைத் திறம்படக் குறைத்து வருகிறது, அத்தகைய சூழலில், ஒரு பாதுகாப்பான சொத்து மதிப்பு என்ற முறையில் தங்கத்தின் அடிப்படைத் தன்மை பலவீனமடையவில்லை.

அது வலுவடைகிறது. மத்திய வங்கித் தேவை, குறுகிய கால விலைத் தரவுகளால் மட்டும் உத்தரவாதம் அளிக்க முடியாத ஒரு நீண்டகால ஆதரவை வழங்குகிறது. சமீபத்திய காலங்களில் உலகளாவிய மத்திய வங்கிகள் ஒரு காலாண்டிற்கு அண்ணளவாக 190 டன்கள் தங்கத்தை வாங்கியுள்ளன, டொலரின் ஆதிக்கம் குறையும் கவலைகள், ரிசர்வ் பல்வகைப்படுத்தும் முயற்சிகளின் ஏற்றம் மற்றும் சவரன் சொத்துகளைச் சுற்றியுள்ள பரந்த உலகளாவிய அரசியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் தூண்டப்பட்டுப் பல வருடத் தங்கச் சேமிப்புப் போக்கை இது தொடர்கிறது.

தங்கத்தின் விலையில் ஏற்படும் ஒவ்வொரு பெரிய வீழ்ச்சியும் இத்தகைய நிறுவன ரீதியான கொள்முதலை ஈர்க்கிறது, இது ஒட்டுமொத்தப் பேரியல் சூழல் சாதகமற்றதாக இருக்கும்போது கூட, விலைச் சரிவின் ஆழத்தையும் அதன் கால அளவையும் கட்டுப்படுத்துகிறது. உலகளாவிய M2 பணப்புழக்கம் இதற்கு மற்றொரு பரிமாணத்தைச் சேர்க்கிறது. சீனாவில் பணப்புழக்கம் வரலாறு காணாத உச்சத்தில் அளவில் அதிகமாக இருப்பதாலும், கடன் விரிவாக்கம் தொடர்வதாலும், காகித நாணயங்களின் முகமதிப்பு அதிகரித்து வருகிறது, அதேவேளையில் தங்கத்தின் இருப்பு இயற்கையாகவே நிலையானதாக உள்ளது.

ஃபெடரல் ரிசர்வ் குறுகிய கால வட்டி வீதங்களை நிலையாக வைத்திருப்பதால் இந்த மாற்றம் மறைந்துவிடாது. மாறாக, இது அமைதியாகத் திரண்டு, பலவீனமான அமெரிக்க டொலருடன் இணையும்போது ஒரே நேரத்தில் தன் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. உலகளாவிய அரசியல் அதிகார ஆட்டம் உலகளாவிய அரசியல் அபாயங்கள் தற்போதைய சந்தையில் எதிர்பாராத ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன.

பாரம்பரியமாக, உலகளாவிய அரசியல் ஸ்திரமற்ற காலங்களில் முதலீட்டாளர்கள் தங்களின் மூலதனத்தைப் பாதுகாக்க தங்கத்தை ஒரு பாதுகாப்பான சொத்து மதிப்பாகத் தேர்ந்தெடுப்பார்கள். இருப்பினும், சமீபகாலமாக, உலகளாவிய அரசியல் பதற்றங்கள் பெரும்பாலும் அமெரிக்க டொலரையே முதலில் வலுப்படுத்துகின்றன; குறிப்பாக நிச்சயமற்ற தன்மையுடன் பணவீக்க எதிர்பார்ப்புகளும் எரிசக்திச் சந்தையின் ஏற்ற இறக்கங்களும் அதிகரிக்கும்போது இது நிகழ்கிறது.

இது தங்கத்திற்கு மிகவும் சிக்கலான சூழலை உருவாக்குகிறது. பாதுகாப்பான சொத்துகளுக்கான தேவையை அதிகரிக்கும் அதே பேரியல் அதிர்ச்சி, வட்டி வீதங்கள் நீண்ட காலத்திற்கு அதிகமாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளையும் வலுப்படுத்தும். இத்தகைய தருணங்களில், தங்கம் வலுவான டொலர் மற்றும் உயர்வான உண்மையான வருவாய்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது.

இது நாம் கவனமாக ஆய்வுசெய்ய வேண்டிய ஒரு வடிவமைப்பாகும். உலகளாவிய அரசியல் அபாயம் சில மணித்தியாலங்களில் தங்கத்தின் விலையை வானுயரத்துக்குக் கொண்டுசெல்லும், ஆனால் அந்த அச்சுறுத்தல் ஒரு தொடர்ச்சியான பெரிய பாதிப்பாக மாறத் தவறும்போது, அந்தக் கூடுதல் மதிப்பு அதே அளவு விரைவாகவே மறைந்துவிடும்.

ஜனவரி மாத விலை உயர்வின்போது முதலீடு செய்து, பின்னர் ஏற்பட்ட 15% விலைச் சரிவு வரையிலும் அதைத் தக்கவைத்திருந்த வர்த்தகர்கள் இந்த நிலையை நேரடியாக அனுபவித்திருப்பார்கள், இது உலகளாவிய அரசியல் அபாயங்கள் எவ்வாறு வெறும் ஏற்ற இறக்கங்களை மட்டுமே உருவாக்குகின்றன, ஆனால் சந்தையின் தெளிவான திசையைக் காட்டுவதில்லை என்பதைப் பிரதிபலிக்கிறது.

இந்த முட்டுக்கட்டையை உடைப்பது எது, அது எந்தத் திசையிலிருந்து வரும்? மூன்று சாத்தியமான சூழ்நிலைகளை நாம் தெளிவாக விளங்கிக்கொள்வது அவசியமானது. ஓர் உண்மையான ஃபெடரல் ரிசர்வ் கொள்கை மாற்றம் (Fed pivot), அது மோசமடைந்து வரும் தொழிலாளர் சந்தை தரவுகளால் உந்தப்பட்டாலும் சரி அல்லது இன்னும் மென்மையான அணுகுமுறை கொண்ட உள்வரும் ஃபெடரல் ரிசர்வின் தலைமையால் இயக்கப்பட்டாலும் சரி, அதுவே தங்கத்தின் விலையேற்றத்திற்கு மிக முக்கியக் காரணியாக மாறும்.

குறைவான உண்மையான விளைபயன்கள் தங்கத்தை நேரடியாக வைத்திருப்பதற்கான வாய்ப்புச் செலவைக் குறைக்கின்றன, அதே நேரத்தில் பலவீனமான டொலர் உலகளாவிய வாங்குபவர்களுக்கு உள்ளூர் நாணய மதிப்பில் அதன் விலையை உயர்த்துகிறது. இந்த இரட்டைச் சாதகப் போக்குகளே 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 55 வீதம் என்ற அசாதாரண உயர்வைப் பதிவு செய்ய காரணமாக அமைந்தன.

இந்தச் சூழ்நிலைகள் மீண்டும் நிலவினால், நிறுவனங்களின் முன்னறிவிப்புகள் தற்போதைய விலை வரம்பின் மேல்முனையை நோக்கி உயரக்கூடும். அந்த நிலையில், J.P. மோர்கன் நிறுவனம் தங்கத்தின் விலை ஆண்டு இறுதிக்குள் ஒரு அவுன்ஸுக்கு 6,300 அமெரிக்க டொலரை எட்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஒரு புதிய பணவீக்க உயர்வு, முரண்பாடாகக் குறுகிய காலத்தில் தங்கத்திற்கு ஒரு தெளிவற்ற நிலையை ஏற்படுத்தலாம். பணவீக்கம் காரணமாக ஃபெடரல் ரிசர்வ் வட்டி வீதங்களை உயர்த்த நேரிட்டால், தங்கத்தின் பாதுகாப்பான சொத்து மதிப்பு என்ற வாதம் அதன் வாய்ப்புச் செலவு அழுத்தத்தை முறியடிப்பதற்கு முன்பாக, உண்மையான வருவாய்கள் மேலும் அதிகரிக்கக்கூடும்.

வாங்கும் சக்தியின் தேய்மானம் மிகவும் சந்தேகம் கொண்ட ஒதுக்கீட்டாளர்களுக்குக் கூட மறுக்க முடியாததாக இருப்பதால் தங்கம் மீள்வதற்கு முன்பு ஆரம்பத்தில் விற்பனைச் சரிவைச் சந்திக்கும். ஃபெடரல் ரிசர்வ் கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கட்டமைக்கப்பட்ட டொலரின் ஒரு வீழ்ச்சியானது மூன்றாவது மற்றும் மிகவும் கவனிக்கப்படாத காட்சியாகும்.

சாதனை அளவிலான அமெரிக்கக் கடன் அளவுகள் மற்றும் உலகளாவிய மொத்தக் கடனில் அரசாங்கத்தின் பங்கு அதிகரித்து வருவது ஆகியவை டொலர் மீதான நம்பிக்கையைப் படிப்படியாகக் குறைக்கும் சூழலை உருவாக்குகின்றன. இது எந்தவொரு பெரிய தூண்டுதலுமின்றித் தங்கத்திற்கு ஒரு நிலையான ஆதரவை வழங்குகிறது.

தற்போது, தங்கம் ஒரு குறிப்பிட்ட திசைவழியான வர்த்தகம் அல்ல; அது ஒரு கட்டமைவு சார்ந்த வர்த்தகம் ஆகும். இந்த முடக்கப்பட்ட விலை மாற்றம் சம பலம் கொண்ட இரு சக்திகளைப் பிரதிபலிக்கிறது, ஒரு சக்தி மற்றொன்றை விடத் தீர்க்கமாக வெல்லும்போது மட்டுமே சந்தை ஒரு தெளிவான திசையில் பயணிக்கும். சந்தை தனக்கான திசை இன்னும் முடிவாகவில்லை என்று தெளிவாகக் கூறும்போது, பெரும்பாலான வர்த்தகர்கள் வலுக்கட்டாயமாக ஒரு திசையை அதன் மீது திணிக்க முயல்வதுதான் அவர்கள் செய்யும் தவறாகும்.

பேரியல் நுண்ணறிவுகளும் சந்தைச் செயல்பாடுகளும் சந்திக்கும்போது போட்டி பேரியல் சக்திகளின் பிடியில் தங்கம் இருக்கும்போது, வர்த்தகர்களுக்கான சவால் எந்தப் பக்கத்தின் வாதம் வலுவானது என்பதைக் கண்டறிவது மட்டுமல்ல. அந்தப் பார்வையை எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதற்கான சூழலை நிர்வகிப்பதும் ஆகும்.

உண்மையான வருவாய்கள், டொலரின் பலம், பணவீக்கத் தரவு மற்றும் உலகளாவிய அரசியல் அதிர்ச்சிகள் அனைத்தும் விரைவாக மாறக்கூடும், இது திசை, ஏற்ற இறக்கம், செயல்பாட்டின் தரம் ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் முக்கியத்துவம் பெறும் சந்தைகளை உருவாக்குகிறது. இத்தகைய சூழலில், வர்த்தக அமைப்பானது பரந்த ஆபத்துக் காரணியின் ஒரு பகுதியாக மாறுகிறது.

ஸ்பிரெட்கள், ஸ்லிப்பேஜ் மற்றும் ஓர்டர் நிறைவேற்றப்படும் நிலைத்தன்மை ஆகியவை, குறிப்பாக முக்கியப் பேரியல் விடுவிப்புகள் அல்லது திடீர் சொத்து மறுமதிப்பீடுகளின்போது, ஒரு சந்தைக் கணிப்பு நாம் நினைத்தபடி வர்த்தகமாக மாறுகிறதா என்பதைத் தீர்மானிக்கலாம். Exness ஐ பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கு, இங்குதான் உள்கட்டமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இது பகுப்பாய்விற்கு மாற்றாக அல்ல, மாறாகச் சந்தை வேகமாக நகரும்போது வர்த்தகர்கள் ஒழுங்குடன் செயல்பட உதவும் சூழலின் ஒரு பகுதியாக அமைகிறது. ஆசிரியரின் கருத்து பேரியல் சக்திகள் இந்த அளவிற்குச் சமமாக இருக்கும்போது, சவாலாக இருப்பது தங்கம் மேலே செல்ல வேண்டுமா அல்லது கீழே செல்ல வேண்டுமா என்று தீர்மானிப்பது மட்டுமல்ல. இது வர்த்தகத்தைச் சுற்றியுள்ள சூழலை நிர்வகிப்பதே ஆகும்.

ஒரு வர்த்தகர் உண்மையான விளைபயன்கள், டொலரின் பலம் அல்லது மத்திய வங்கியின் தேவை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சரியாகக் கண்டறிந்தாலும், சந்தை நகர்வின்போது ஸ்பிரெட்கள், ஸ்லிப்பேஜ் அல்லது செயல்பாட்டின் தரம் மோசமடைந்தால் அவர்களின் சாதகமான வாய்ப்பு குறையக்கூடும். அதனால்தான் உள்கட்டமைப்பு முக்கியமானது.

ஏற்ற இறக்கங்கள் நிறைந்த சூழலில், செயல்பாடு என்பது வெறும் வேகத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது, ஓர் உத்தி பயன்படத்தக்கதாக இருக்க, ஓர்டர்கள் போதுமான நிலைத்தன்மையுடனும் கட்டுப்பாட்டுடனும் நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பொறுத்தது. Exness வர்த்தகர்களுக்கு இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் சுறுசுறுப்பான சந்தைகளுக்குச் சரியான பேரியல் பார்வை மட்டும் போதாது. விலை வேகமாக மாறும்போது அந்தப் பார்வையின்படி ஒழுங்குடன் செயல்பட அனுமதிக்கும் வர்த்தகச் சூழலும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US