நாட்டில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் - கர்தினால் மெல்கம் ரஞ்சித்
நாட்டில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.
புதிய அரசாங்கத்தை தெரிவு செய்யும் வாய்ப்பு
மக்களால் புதிய அரசாங்கமொன்றை தெரிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கந்தான புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டை நேசிக்காத தலைவர்களை கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
நாட்டின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காது தங்களது இருப்பினை பற்றி மட்டும் சிந்திக்கும் அரசியல்வாதிகளுடன் பயணித்தால் நமக்கு எதிர்காலம் இருக்காது.
தேர்தலை நடத்த கோரிக்கை
தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும்.

தற்போது மக்களின் உரிமைகளை முடக்கக்கூடிய சட்டங்களே நிறைவேற்றப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri
ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam