இலங்கைக்கு கடத்த முயன்ற பெருமளவிளான கஞ்சா மீட்பு
இலங்கைக்கு கடத்த முயன்ற 240 கிலோ கஞ்சாவை சர்வதேச கஞ்சா கடத்தல் குழுவினரிடமிருந்து ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்ட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம்(06.06.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த கஞ்சா அனகாபள்ளியில் இருந்து கொண்டு செல்லப்பட்டபோது, பாரவூர்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொல்கத்தா-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சூலூர்பேட்டையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை நபர் தலைமறைவு
இந்த சம்பவத்தின் போது சென்னையைச் சேர்ந்த 6 பேரும், ஆந்திர பிரதேஸை சேர்ந்த 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஆந்திர பிரதேஸின் ஒருவரும் இலங்கையை சேர்ந்த ஒருவரும் தலைமறைவாகியுள்ள
நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பதி
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam