பதிவு செய்யாமல், நிறுவனம் ஒன்றுக்கு , முக்கிய புற்றுநோய் மருந்து இறக்குமதிக்கு அனுமதி!
புற்றுநோய்க்கு தேவையான மருந்தை இறக்குமதி செய்ய விநியோகஸ்தர் முன்வராத காரணத்தினால், பதிவு செய்யப்படாமலேயே தனியார் நிறுவனமொன்றுக்கு, குறித்த மருந்தை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, தென் கொரியாவில் இருந்து ட்ராஸ்டுஜுமாப் (Trastuzumab) என்ற மருந்தை இறக்குமதி செய்வதற்காக ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் (பிரைவேட்) லிமிடெட் (George Steuart Health (Pvt) Ltd) நிறுவனத்திற்கு, இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகம் ‘பதிவு விலக்கு’ வழங்கியுள்ளது.
அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட மற்றும் பக்க விளைவுகளைப் பார்க்கும் வழக்கமான செயல்முறை பின்பற்றப்படாது,
அதற்கு பதிலாக இறக்குமதியாளர் மருந்துக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த இறக்குமதி மேற்கொள்ளப்படுகிறது.
வழக்கமாக அவர்கள் இந்த செயல்முறை பின்பற்றப்படுவதில்லை. எனினும் அரசாங்கத்தின் தேவையை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தலைவர் ரசித விஜேயவர்த்தன தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட மருந்து மார்பக மற்றும் வயிற்று புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது
மற்றும் அரச மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.
இந்த மருந்து ஒரு குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 90,250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
