யூதர்கள் சென்ற பாதையில் ஈழத்தின் அடைவு.. சாத்தியமாக்கிய கனேடியத் தமிழர்கள்
கனடா பிரம்டனில் தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டுள்ளமை ஈழத்தமிழர்களின் கூட்டு வரலாற்றில் முக்கியமான தருணமாகும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
அகதியாகப்போன நாடொன்றில் அதிதிகளாக மாறிய தமிழர்கள், இப்படிப்போனாலே தேசம் அமைந்துவிடும் என்று உலகத் தமிழினம் எடுத்துவிட்டுள்ள ஒரு புதிய வியூகம் என்றுதான் இதனைக் கூறவேண்டும்.
தமிழர்கள் அகதிகளாகச் சென்ற ஒரு நாட்டில், தாமும் வாழ்ந்து, அந்தத் தேசத்தையும் வளம்பெறவைத்ததன் விளைவை உலகம் தற்பொழுது பார்த்து வியந்துநிற்கின்றது.
சமத்துவம், நீதி என்ற தமது அத்தனை முகமூடிகளை அவசர அசரமாகக் கழட்டிவிட்டு, சிறிலங்காவின் ஆளும் தேசிய மக்கள் சக்தி பதறியடித்துக்கொண்டு தெருவில் இறங்கி எதிர்ப்புக்குரல் எழுப்புவதில் இருந்தே, புலம்பெயர் தமிழர்களின் அந்தப் பாய்ச்சல் எத்தனைவீரியம் மிக்கது என்று தெரிகின்றது.
புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட அந்த வரலாற்று முன்நகர்வு பற்றியும், அதனது பெறுபேறுகள் பற்றியும் ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
