கனடாவில் மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த இலங்கை தமிழர்! விசாரணையில் திருப்பம்

Sri Lankan Tamils Sri Lanka Canada
By Dhayani Nov 23, 2022 06:21 PM GMT
Report

கனடாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் மீதான வழக்கு விசாரணை  நேற்று ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த தன் மனைவி தர்ஷிகா ஜெகன்நாதன் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்திருந்தார்.

அதன்படி குறித்த பகுதியில் ஆண் ஒருவர் வாளுடன் பெண் ஒருவரைத் துரத்துவதாக கிடைத்த பல்வேறு முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, அந்தப் பெண் பலமுறை கத்தியால் வெட்டப்பட்டு படுபயங்கரமான காயங்களுடன் கிடந்த நிலையில் பின்னர் உயிரிழந்திருந்தார்.

கனடாவில் மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த இலங்கை தமிழர்! விசாரணையில் திருப்பம் | Canada Srilankan Husband Kills Estranged Wife

இதனையடுத்து சசிகரன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் ஒன்றாறியோ நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய காணொளி காட்சி நேற்று நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இலங்கை தமிழர் வழங்கிய சாட்சியம்

மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட சசிகரன் தனபாலசிங்கத்தின் குடும்ப நண்பர் ஒருவர் அளித்த சாட்சியமும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சசிகரனின் வாக்குமூலம் விசாரணை அதிகாரி கெரி பெர்ணாண்டஸிடம் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூலம் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்னை ஒரு சம்பவத்தில் குற்றம் சாட்டுகிறீர்கள். நான் எதுவும் செய்யவில்லை. ஒரு சிறு பறவையைக் கூட கொல்வது எனக்கு பிடிக்காது, எனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்ததிலிருந்து மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தேன். கனடாவுக்கு புலம்பெயர்வதற்காக மட்டுமே என்னை தர்ஷிகா திருமணம் செய்ய நினைத்தார்.

ஏற்கனவே முன்னர் என்னை அவர் தாக்கிவிட்டு நான் அவரை அடித்ததாக பொய் புகார் அளித்தார் போன்ற விடயங்களை தெரிவித்துள்ளார்.

கனடாவில் மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த இலங்கை தமிழர்! விசாரணையில் திருப்பம் | Canada Srilankan Husband Kills Estranged Wife

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இதனை தொடர்ந்து  தனபாலசிங்கம் குடும்ப நண்பரான சோமகல சோமகாசன்  உயிரிழப்பதற்கு முன்னர் வழங்கிய சாட்சியமும் அரச சட்டத்தரணி அன்ட்ரூ பில்லாவினால் வாசிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த இலங்கை தமிழர்! விசாரணையில் திருப்பம் | Canada Srilankan Husband Kills Estranged Wife

தர்ஷிகா திருமண பந்தத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் தனபாலசிங்கத்தை சந்தித்து மத்தியஸ்தம் செய்ய தான் அழைக்கப்பட்டேன்.அப்போது கோபப்பட்ட தனபாலசிங்கம், நான் அவளை அப்படியே விட விரும்பவில்லை.நான் தர்ஷிகாவை கொல்லப்போகிறேன். அவள் எனக்காக இல்லை என்றால், யாருக்காகவும் இருக்கக்கூடாது என தெரிவித்தாக கூறியுள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், செப்டம்பர் 11, 2019 அன்று மாலை 6:15 மணியளவில் நடந்த கத்திக் குத்துத் தாக்குதல் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. அந்த காணொளியில் தர்ஷிகாவை கொலை செய்தது தனபாலசிங்கம் என்று நீதிமன்றம் மற்றும் அரச தரப்பினரால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தனபாலசிங்கம் குறித்து தடயவியல் மனநல மருத்துவரின் மதிப்பீட்டிற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் டாம் பிட்மேன் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ளது.





31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US