கனடாவில் மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த இலங்கை தமிழர்! விசாரணையில் திருப்பம்
கனடாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் மீதான வழக்கு விசாரணை நேற்று ஆரம்பமாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த தன் மனைவி தர்ஷிகா ஜெகன்நாதன் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்திருந்தார்.
அதன்படி குறித்த பகுதியில் ஆண் ஒருவர் வாளுடன் பெண் ஒருவரைத் துரத்துவதாக கிடைத்த பல்வேறு முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, அந்தப் பெண் பலமுறை கத்தியால் வெட்டப்பட்டு படுபயங்கரமான காயங்களுடன் கிடந்த நிலையில் பின்னர் உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து சசிகரன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் ஒன்றாறியோ நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய காணொளி காட்சி நேற்று நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
The police interrogation video has been shown at the trial for a #Scarborough man accused of murdering his estranged wife with a machete in 2019 @TPSHomicide @TorontoPolice #VAWG #femicide https://t.co/HBmZMIlPrk
— Catherine McDonald (@cmcdonaldglobal) November 23, 2022
இலங்கை தமிழர் வழங்கிய சாட்சியம்
மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட சசிகரன் தனபாலசிங்கத்தின் குடும்ப நண்பர் ஒருவர் அளித்த சாட்சியமும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சசிகரனின் வாக்குமூலம் விசாரணை அதிகாரி கெரி பெர்ணாண்டஸிடம் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூலம் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
நீங்கள் என்னை ஒரு சம்பவத்தில் குற்றம் சாட்டுகிறீர்கள். நான் எதுவும் செய்யவில்லை. ஒரு சிறு பறவையைக் கூட கொல்வது எனக்கு பிடிக்காது, எனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்ததிலிருந்து மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தேன். கனடாவுக்கு புலம்பெயர்வதற்காக மட்டுமே என்னை தர்ஷிகா திருமணம் செய்ய நினைத்தார்.
ஏற்கனவே முன்னர் என்னை அவர் தாக்கிவிட்டு நான் அவரை அடித்ததாக பொய் புகார் அளித்தார் போன்ற விடயங்களை தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இதனை தொடர்ந்து தனபாலசிங்கம் குடும்ப நண்பரான சோமகல சோமகாசன் உயிரிழப்பதற்கு முன்னர் வழங்கிய சாட்சியமும் அரச சட்டத்தரணி அன்ட்ரூ பில்லாவினால் வாசிக்கப்பட்டுள்ளது.
தர்ஷிகா திருமண பந்தத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் தனபாலசிங்கத்தை சந்தித்து மத்தியஸ்தம் செய்ய தான் அழைக்கப்பட்டேன்.அப்போது கோபப்பட்ட தனபாலசிங்கம், நான் அவளை அப்படியே விட விரும்பவில்லை.நான் தர்ஷிகாவை கொல்லப்போகிறேன். அவள் எனக்காக இல்லை என்றால், யாருக்காகவும் இருக்கக்கூடாது என தெரிவித்தாக கூறியுள்ளார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், செப்டம்பர் 11, 2019 அன்று மாலை 6:15 மணியளவில் நடந்த கத்திக் குத்துத் தாக்குதல் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. அந்த காணொளியில் தர்ஷிகாவை கொலை செய்தது தனபாலசிங்கம் என்று நீதிமன்றம் மற்றும் அரச தரப்பினரால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தனபாலசிங்கம் குறித்து தடயவியல் மனநல மருத்துவரின் மதிப்பீட்டிற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் டாம் பிட்மேன் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ளது.