கனடாவின் முக்கிய வன்முறை கும்பலின் பட்டியல் வெளியானது
கனடாவில் வன்முறை கும்பலை சேர்ந்த 9 பேரின் பட்டியலை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த வன்முறை கும்பலை சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேரின் பட்டியலையும் பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன்,அவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அவசரமாக அறிவுறுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சிறப்பு ஆயுதப் படை, வான்கோவர் பொலிஸார் மற்றும் பி.சி ராயல் கனேடியன் மௌண்டட் பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களுக்கான இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பட்டியலிடப்பட்ட நபர்களின் விபரம்
இவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் 11 பேரும்,கும்பல் மோதல்கள் மற்றும் தீவிர அளவிலான வன்முறைகளுடன் தொடர்புகொள்வதன் காரணமாக பொது பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளவர்கள் எனவும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒருங்கிணைந்த படைகளின் சிறப்பு அமுலாக்கப் பிரிவு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
குறித்த 11 பேர் பட்டியலில், ஷாகியேல் பாஸ்ரா (28), அமர்பிரீத் சாம்ரா (28), ஜக்தீப் சீமா (30), ரவ்ந்தர் சர்மா (35) பரிந்தர் தலிவால் (39) ஆண்டி செயின்ட் பியர் (40) குர்பிரீத் தாலிவால் (35) ரிச்சர்ட் ஜோசப் விட்லாக் (35) 40), அம்ரூப் கில் (29), சுக்தீப் பன்சால் (33), சும்திஷ் கில் (28) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam